பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து கங்குலி ராஜினாமாவா?
பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி இராஜினாமா செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்து வருகிறார் என்பதும் அவரது தலைமையின் கீழ் பிசிசிஐ சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கங்குலி அல்லது அவரது மனைவிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அது குறித்து தகவலை கங்குலி மறுத்தார்.
இந்த நிலையில் கங்குலி திடீரென பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பிடம் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது