1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மே 2024 (08:38 IST)

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டு  உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே கூறியதோடு, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே மட்டக்களப்பில் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினார்

அப்போது அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளை அடிக்கப்படுகிறது என்றும், தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். இலங்கையில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர்   ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் தேர்தலை நிறுத்த சில சக்திகள் சதி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva