புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு கல்வி: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

jaisankar
உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வியை தொடரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டதை அடுத்து உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் இந்திய அரசால் மீட்கப்பட்டு பத்திரமாக தாய்நாடு அழைத்து வரப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வியை, அண்டை நாடுகளில் தொடர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் விரும்பினால் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று படிக்கலாம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
 
இந்த தகவல்களில் இருந்து உக்ரைனில் படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது