1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மே 2024 (06:49 IST)

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இலக்க எண்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இல்லை என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடந்து வரும் நிலையில் ஆறுகட்ட தேர்தல் முடிவடைந்து ஜூன் 1ஆம் தேதி ஏழாம் பெற்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ள நிலையில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்து தகவல்களை அவ்வப்போது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூன்று இலக்க எண்களை தொடாது என்றும் 50 முதல் 55 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றும் அதிகபட்சமாக 72 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு அரசியல் நிபுணரான யோகேந்திர ராவ் கூறும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு தனியாக 240 முதல் 260 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி 300 முதல் 400 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று ஒரு சில அரசியல் பார்வையாளர்களும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva