46 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் லட்சக்கணக்கில் உயர தொடங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 97,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 46,59,985 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 1,209 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது. 81,553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 36,24,197 ஆக உயர்ந்துள்ளது.