1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2025 (14:45 IST)

பெண்களை வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை! - முதல்வரின் அதிரடி சட்டத்திருத்தம்! முழு விவரம்!

MK Stalin

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு வழங்கப்படும் தண்டனைகளை மேலும் அதிகரித்து புதிய சட்டத்திருத்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.

 

 

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்க குற்றங்களுக்கான தண்டனையை அதிகரித்து புதிய சட்டத்திருத்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ளார். அதன் விவரங்கள்

 

2023ம் ஆண்டு பிஎன்எஸ் சட்டம் தமிழகத்திற்கு பொருந்தும் வகையில் 2025ம் ஆண்டில் குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றவாளி, குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் வெளியே வர முடியாது.

 

பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் குற்றவாளிக்கு குறைந்தபட்ச கடுங்காவல் தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 14 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

 

நெருங்கிய உறவினர்கள் அல்லது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை (முன்னர் 10 ஆண்டுகளாக இருந்தது)

 

12 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும் (முன்னர் இருந்த 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை இருந்தது)

 

பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றம் புரிவோருக்கு பிணையில் வர முடியாத வாழ்நாள் கடுங்காவல் ஆயுள் தண்டனை (முன்னர் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாக இருந்தது)

 

கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். பல்வேறு பாலியல் குற்றங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்படும்.

 

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை (முன்னர் 3 ஆண்டுகளாக இருந்தது)

 

பெண்களை பின் தொடர்ந்து செல்வதற்கு முதல் முறை 5 ஆண்டுகளும், இரண்டாவது முறை செய்தால் 7 ஆண்டுகளும் சிறை தண்டனை 

 

ஆசிட் வீசி பெண்களை தாக்குவது, கொலை முயற்சி செயல்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் (முன்னர் அதிகபட்சம் ஆயுள் தண்டனை இருந்தது)

 

Edit by Prasanth.K