புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (08:11 IST)

அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்… ரைசா காட்டில் மழை!

ரைசா வில்சன் அடுத்ததாக சுந்தர் சி தயாரிக்கும் மாயா பஜார் திரைப்படத்தின் ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தால் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகலாம் என நம்பி சென்றவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதில் ஒரே ஒரு விதிவிலக்கு என்றால் அது ரைசா வில்சன்தான். பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் அவரை யாருக்குமே தெரியாது. ஆனால் வெளியே வந்த பின்னர் அவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உருவாகியுள்ளார்.

திருடன் போலீஸ் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கியுள்ள சூர்ப்பநகை படத்தில் நடித்து முடித்துள்ள ரைசா, தற்போது சுந்தர் சி தயாரிப்பில் அவர் உதவியாளர் பத்ரி இயக்கும், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாயாபஜார் எனும் படத்தின் ரீமேக் உரிமையை சுந்தர் சி  வாங்கியுள்ளார். இதில் பிரசன்னா கதாநாயகனாக நடிக்க உள்ளார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.