புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (08:59 IST)

மும்மொழிக் கொள்கையில் திமுக நவீன தீண்டாமை – பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக நவீனத் தீண்டாமையைக் கடைபிடிக்கிறது என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பேசியுள்ளார்.

மத்திய அரசுக் கொண்டு வர உள்ள மும்மொழிக் கொள்கையின் மூலம் மீண்டும் இந்தி திணிப்பை செய்ய முய்லவதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை திமுக தமிழகத்தில் கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழக அரசு தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என உறுதியாக சொல்லிவிட்டது.

இந்நிலையில் தமிழக பாஜகவினர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தமிழக தலைவர் எல் முருகன், ‘ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கை இல்லை. இந்த நவீனத் தீண்டாமையை திமுக ஏற்று பின்பற்றுகிறது.’ எனக் கூறியுள்ளார்.