செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (08:24 IST)

சூரியை ஹீரோவாக்க விரும்பும் இயக்குனர்கள்… வெற்றிமாறனுக்கு வெயிட்டிங்!

நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்ல முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக சூரி ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த படம் மீரான் மைதீன் என்ற எழுத்தாளர் எழுதிய அஜ்னபி என்ற நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்திய பணியாளர்களின் அவல வாழ்க்கையை சொல்லும் துயர காவியம் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்காக சூரி, தாடி வளர்த்து உடல் பயிற்சி எல்லாம் செய்து கடுமையாக தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் வாடிவாசல் படத்திலும் கவனம் செலுத்துவதால் சூரி படத்தை எப்போது ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. இதற்கிடையில் சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனராம். ஆனால் எல்லோருக்கும் வெற்றிமாறன் படம் முடிந்தபின்னர்தான் அடுத்த கட்ட முடிவு என சூரி உறுதியாக சொல்லிவிட்டாராம்.