காசோலைகளுக்கு மூடுவிழா: டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மத்திய அரசின் அடுத்த மூவ்!!
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிரடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல அடுத்து வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் காசோலைகள் நிறுதப்படக்கூடும் என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் தெரிவித்துள்ளார்.
அதோடு, அரசு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக ரூ.2000 கோடி செலவு செய்கிறது. இதில் ரூ.6,000 கோடியானது பாதுகாப்பு அம்சங்களுக்கானதாகும்.
ஆனால் மின்னணு வங்கி பரிவர்த்தணைக்கு குறைந்த சதவீத கட்டணங்களே வசூலிக்கப்படுவதாலும், வங்கிகளுக்கு மானியம் அளிக்க முடிவு செய்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது 95% வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. எனவே, காசோலை நடைமுறை ஒழிக்கப்படுமானால், அது மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.