திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (18:11 IST)

நெஞ்சில் துணிவிருந்தால் படம் தியேட்டர்களில் திடீர் நிறுத்தம்; இயக்குநர் அறிவிப்பு

சுசீந்திரன் இயக்கியத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் இனி ஓடாது என்ற அறிப்பு  செய்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

 
இப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆன்டனி  தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தரப்பட்ட ப்ரமோஷன்கள் மாதிரி வேறு எந்தப் படத்துக்கும் தந்ததில்லை. ஆனால் இப்போது  படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் படத்தை தியேட்டர்களை விட்டு தூக்கிவிட்டனர் அதன் தயாரிப்பாளர்  மட்டும் இயக்குநர்.
 
கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படத்தின் விமர்சனங்கள் திருப்தியாக இல்லாததால், இரு தினங்கள் கழித்து, படத்தின் நாயகி  மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட 20 நிமிட காட்சிகள் படக்குழு நீக்கியிருந்தது. ஆனால் அப்படியும் ரிசல்ட் திருப்திகரமாக இல்லாததால்,  திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். அதில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை  ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் இப்படம் அடுத்தமாதம் 15ஆம் தேதி (டிசம்பர்) மீண்டும் திரைக்கு வருகிறது.
 
இந்த படத்திற்கு விமர்சனம் செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறியதோடு, நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த  படம் ஓடாது என கூறியுள்ளார்.