வாய்ஸ் கால் சேவையை நிறுத்தும் ரிலையன்ஸ்: வாடிக்கையாளர்களின் நிலை என்ன??
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் வாய்ஸ் கால் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் இரு நிறுவனங்களின் ரூ.60,000 கோடி கடன் தொல்லை நீங்கும் என கூறப்பட்டது.
ஆனால், இந்த இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. இந்நிலையில், 75 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போர்ட் செய்துக்கொள்ளாம் என தெரிவித்துள்ளது.
மேலும், ரிலையன்ஸ் அதன் சிடிஎம்எ நெட்வொர்க்கை மேம்படுத்த முடிவெடுத்துள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என சில தரப்பில் கூறப்படுகிறது.
இனி ஆர்காம் நிறுவனம் 4ஜி சேவையில் மட்டுமே இயங்கும் என்றும் சில செய்திகள் வெளியாகிறது. அதன் 4ஜி சேவையை டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத், கொல்கட்டாவிற்கு கொடுத்து வருகிறது.