மிடாஸில் சரக்கு வாங்க மாட்டோம் ; தமிழக அரசு அதிரடி முடிவு? ; சசிகலாவிற்கு அடுத்த ஆப்பு
சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில், மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான நிறுவனத்திலும் சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி ரூபாய்க்கு முறைகேடான பணவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து மிடாஸ் நிறுவனத்தில் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது எந்த நிறுவனமும் அங்கு மதுபானங்களை கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் நிறுவனத்தின் மூலமே 25 சதவீதம் அளவுக்கு மதுபான வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதை நிறுத்திக்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சசிகலா குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.