புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (11:19 IST)

சமூக வலைதளங்கள் மூலம் 12 ஆயிரம் பெண்கள் பலாத்காரம்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

2018ம் ஆண்டு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்கள் 12 ஆயிரத்திற்கும் மேல் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த கொலை மற்றும் பாலியல் பலாத்கார குற்ற சம்பவங்கள் குறித்த புள்ளி விவரத்தை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டு முழுவதும் மொத்தமாக 29 ஆயிரம் கொலை வழக்குகளும், 33 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகி இருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு ஒப்பிடும்போது 2018ம் ஆண்டில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் 2018ம் ஆண்டில் பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுத்திய குற்ற வழக்குகள் 12 ஆயிரத்து 568 என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களில் 100ல் 95 பேர் தனது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால்தான் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.