1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:39 IST)

மாடியில் விளிம்பில் நடந்து சென்ற குழந்தை... பதைபதைக்க வைக்கும் வீடியோ

ஒரு குழந்தை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள 4 வது மாடியில் ஜன்னலோர விளிம்பில் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள  பெரியாசியோ பகுதியில் உள்ள டெனிரிஃபியில் உள்ள ஒரு அடுக்கு,ஆடி குடியிருப்பில் ஒரு குழந்தை ஒன்று, வீட்டின் ஜன்னலில் வழியே வெளியே வந்து, பக்கவாட்டில் உள்ள சிறிய இடைவெளியில் நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நல்லவேளை  குழந்தை செல்லும்போது காற்று பலமாக வீசவில்லை என்பதால் ஆபத்தறியாமல் சென்ற குழந்தைக்கு ஒன்று ஆகவில்லை என இந்த வீடியோவை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இளம் கன்று பயமறியாது என முதுமொழி உள்ளது போன்று இக்குழந்தை சென்றாலும் கூட அதைப் பார்ப்பவர்களின் பதைபதைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.