புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (18:08 IST)

இதுமட்டும் நடந்திருந்தால் டெல்லியில் பாஜகவுக்கு 44 சீட்: சொன்னது யார் தெரியுமா?

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையிலொ காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாஜக எம்பி சத்யதேவ் பச்சோரி என்பவர் தனது டுவிட்டர் தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 100 ஓட்டு வித்தியாசத்தில் 8 தொகுதிகளிலும், ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் 19 தொகுதிகளிலும், 2,000 ஓட்டு வித்தியாசத்தில் 9 தொகுதிகளிலும் தோல்வியடைந்ததாகவும் தற்போது வெற்றி பெற்றுள்ள 8 தொகுதிகளில் சேர்த்தால் பாஜகவுக்கு 44 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும் என்றும் மூன்று சதவீத ஓட்டுகளால் பாஜகவின் வெற்றி பறிபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் பாஜக எம்பி சத்யதேவ் பச்சோரி கூறிய இந்த புள்ளிவிவர கணக்கு தவறானது என்றும் நூறு ஓட்டுக்களுக்கு குறைவாக பாஜக ஒரு தொகுதியில் கூட தோல்வி அடையவில்லை என்றும் அனைத்து தொகுதிகளிலும் அதிகபட்ச வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பாராளுமன்ற எம்பியே இவ்வாறு தவறான தகவல்களை கூறலாமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்