சிங்கில் டிஜிட் சக்சஸ்: வீணாய் போன அமித்ஷாவின் ராஜ தந்திரங்கள்?

Sugapriya Prakash| Last Updated: புதன், 12 பிப்ரவரி 2020 (13:01 IST)
டெல்லியில் மீண்டும் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது அமித்ஷாவின்  ராஜ தந்திரங்கள் வேலைக்கு ஆகாததை காட்டுறது.
 
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
 
இந்நிலையில் பாஜகவின் தோல்வி, அமித்ஷாவின் தேர்தல் வியூகம் தோல்வியை தழுவியதையே காட்டுகிறது. பாஜகவின் 250 எம்.பி.க்கள், தமிழக தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரதமர் மோடி என பிரசாரக் களத்தில் பாஜ்க கலர் காட்டினாலும் கடைசியில் கிடைத்ததது என்னமோ ஒற்றை இலக்கி வெற்றியே. 
 
தேர்தல் பிரசார அணியின் தலைவராக கட்சியின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அவர் வீடு, வீடாகச் சென்று, கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார், மாலை நேரங்களில் உரையாற்றினார். ஆனால், இவை எதுவுமே பலனலிக்கவில்லை. 
 
இனி அமித்ஷா தேர்தலுக்கு பழைய வியூகங்களை தூக்கி போட்டு புதிதாக சிலவற்றை யோசிக்க வேண்டும் என்பது அவருக்கு ந்த டெல்லி தேர்தல் முடிவு பாடம் புகட்டியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :