செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2020 (14:08 IST)

சட்ட மன்ற தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு !

டெல்லி  முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் புதிதாக தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கெஜ்ரிவால் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் , முன்னாள் மத்திய அரசு ஊழியரான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 
 
மீதமுள்ள 7 தொகுதிகளில் பெரிதுக் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக கட்சி பெற்றது. காங்கிரஸுக்கு பெருவாரியான இடங்களில் டெபாஸிட் கிடைக்காமல் படுதோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில், ஜெர்ரிவால் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.