திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (14:58 IST)

பாஜக அரசு தோல்வியை தழுவும்- காங்., தலைவர் மல்லிகார்ஜூன காக்கே

congress
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜீன் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இதனால் அனைத்து கட்சிகளுக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி  உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது.
 
தற்போது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:

''நாட்டு மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில்  வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்து தோற்றது. அதேபோன்ற நிலை தற்போதைய பாஜக அரசுக்கு ஏற்படும். தேர்தல் அறிக்கையை காங்., தொண்டர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கும் முன் அவற்றை  நிறைவேற்ற முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. நமது காலத்தில் யாரும் இவ்வளவு பெரிய யாத்திரை மேற்கொண்டதில்லை. இது அரசியல் யாத்திரையல்ல. மக்கள் தொடர்பு இயக்கமாக அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படும். இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை தேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது'' என்று தெரிவித்துள்ளார்.