வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (13:31 IST)

சேலம் பாஜக மேடையில் ’நாட்டாமை’ நாயகன் - நாயகி: வைரல் புகைப்படம்..!

சேலத்தில் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் பிரதமரை கூட்டணி கட்சி தலைவர் புகழ்ந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் சமீபத்தில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் மற்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன்பின் கடந்த சில வருடங்களுக்கு முன் பாஜகவில் மிக குஷ்பு ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சரத்குமார் மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நாட்டாமை படத்தில் இணைந்து நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரே கட்சியில் இருப்பதை பார்த்து மீம்ஸ்கள் இணையதளங்களில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சரத்குமார் மற்றும் குஷ்பு ஆகிய இருவருக்குமே வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இருவரும் இணைந்து ஒரே கூட்டணியில் தேர்தல் களத்தையும் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்

Edited by Mahendran