ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (20:25 IST)

மாணவர்களுக்கும் சானிடரி நாப்கின் கொடுத்த பீகார் அரசு: விசாரணைக்கு உத்தரவு!

பீகார் மாநிலத்தில் மாணவியர் மட்டுமின்றி மாணவர்களுக்கும் சானிட்டரி நாப்கின் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் புகாரை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் படித்து வரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு மாணவிக்கு சானிட்டரி நாப்கின் வாங்க ஒரு ஆண்டுக்கு 150 ரூபாய் அரசால் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் மாணவிகள் மட்டுமின்றி சில மாணவர்களும் இந்த நிதியை பெற்று உள்ளதாகவும் புகார் எழுந்தது 
இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பீகாரில் மாணவர்களுக்கும் சானிட்டரி நாப்கின் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.