வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:55 IST)

கல்லூரி மாணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த 10ஆம் வகுப்பு மாணவிகள்! அதிர்ச்சி தகவல்

2 பத்தாம் வகுப்பு மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழக ஆந்திரா எல்லையில் பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன். இவர் அடிக்கடி பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது தனிப்பட்ட முறையில் வீடியோ எடுத்ததாகவும் தெரிகிறது.
 
இந்த வீடியோவை காட்டி இரண்டு மாணவிகளிடமும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் மிரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் மாணவிகள் பணம் கொடுக்க முடியாததால் தங்களை மிரட்டும் கல்லூரி மாணவனை கொலை செய்ய முடிவு செய்தனர் 
 
இதனை அடுத்து கூலிப்படையை ஏவி மணிகடன்னை கொலை செய்ததாக தெரிகிறது. இதனை கண்டுபிடித்த போலீசார் தற்போது மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் கூலிப்படையினரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.