தெருநாய்கள் கடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் காசிபேட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கடித்ததில் 7 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிபிகஞ்ச் என்ற பகுதியில் பனிரெண்டு வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த சிறுவனை சூழ்ந்த தெருநாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் காசிபேட் பகுதியில் இதேபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் காசிபேட் பகுதியில் உள்ள ரெயில்வே காலனி அருகேயுள்ள ஒரு பூங்காவில் தெரு நாய்கள் கூட்டம் 7 வயது சிறுவனை கடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நியுதவி வழங்கியுள்ளார்.
அந்த சிறுவன், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சிறிய பொருட்கள் விற்கும் குடிபெயர்ந்தவர்களின் மகன் சோட்டு( 7வயது ) என்பது குறிப்பிடத்தக்கது.