ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (11:28 IST)

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் நடந்த இந்து மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், அந்த கூட்டத்தில் அவர் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று முன் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

அதனை அடுத்து கஸ்தூரியை கைது செய்ய போலீசார் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், தனிப்படை போலீசார் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். பரவாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran