1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (18:35 IST)

இளம்பெண்ணிற்கு இணையாக நடனமாடிய யானை..வைரலாகும் வீடியோ

elephant
உத்தரகாண்ட் மாநிலத்தில் இளம்பெண்ணின் நடனத்திற்கு இணையாக யானை ஒன்று நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. இப்பூங்காவில் பல வனவிலங்குகள்  பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது.

இப்பூங்காவிற்குச் சென்ற வைஷ்ணவி என்ற பெண்,  யானை ஒன்றின் முன்பு நின்று நடனமாடியுள்ளார்.

இதைப்பார்த்த அந்த யானையும், அப்பெண்ணின் நடனத்திற்கு இணையாகத் தன் உடலை ஆட்டி, அசைத்து நடனம் ஆடியுள்ளது. இதை  ஒருவர் வீடியோ எடுக்கவே, இந்த வீடியோவை வைஷ்ணவி நாயக் தன் இன்ஸ்டாகிராமில்  பின்னணி இசையுடன் பகிர்ந்துள்ளார்.

இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், கட்டிவைத்துள்ள யானையின் உணர்வுகளுடன் விளையாட்ட வேண்டாம் என்ற விமர்சனர்களும் எழுந்து வருகிறது.