1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Are you happy the boyfriend committed suicide after sending a message to his girlfriend

'' நீ சந்தோஷமா இரு''...காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த காதலன்!

Love
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காதலியின் தாய் திட்டியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் சசிக்குமார். இவர் அங்குள்ள ஒரு தனியார் செல்போன் விற்பனை கடையில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு அதேகடையில் பணியாற்றிய சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், இருவீட்டிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்த நிலையில், பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்கியுள்ளார் சசிக்குமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில்,    சசிக்குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பதாக தன் காதலிக்கு,  ''நான் பிறந்திருக்கவே கூடாது;  நீ சந்தோஷமா இரு'' என்று மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் காதலியின் தாய் திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா..? டிடிவி. தினகரன்