ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (10:03 IST)

தீபாவளி நாளில் ஆந்தைகளை பலி கொடுக்க திட்டம் – பேயோட்டிகளைத் தேடும் போலிஸார் !

டெல்லி காஜியாபாத் அருகே அரியவகை 5 ஆந்தைகளை தீபாவளி அன்று பலி கொடுப்பதற்காக கடத்திச் சென்றவர்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி அருகேயுள்ள காஜியாபாத்தில் தீபாவளியன்று பலிக் கொடுக்க ஐந்து அரியவகை ஆந்தைளை கடத்திச் சென்ற சுமித் மற்றும் படேல் என்ற இரு கடத்தல்காரர்களை சோதனையின் போது போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 ஆந்தைகளையும் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக இருவரிடமும் நடத்திய விசாரணையில் தீபாவளி அன்று லட்சுமி தேவிக்காக பலி கொடுப்பதற்காக அந்த ஆந்தைகளை பேயோட்டிகள்  கடத்திவரச் சென்றதாக கூறியுள்ளனர். இந்த ஆந்தைகளைப் பலிக்கொடுத்தால் அதிர்ஷடம் கிட்டும் என்று செழிப்பாக வாழலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து போலிஸார் அந்த பேயோட்டிகளைக் கைது செய்யும் முனைப்பில் அவர்களைத் தேடி வருகின்றனர்.