செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (07:59 IST)

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில்  நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சென்னை பல தீவுகள் போல காட்சியளித்தது. முக்கியமாக மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சுரங்கப் பாதைகள்  தண்ணீரால் நிரம்பி காணப்பட்டன. முக்கியமாக விமானப் போக்குவரத்து சேவையும் முடங்கியது.

தற்போது புயல் கரையைக் கடந்துள்ளதால் இனி மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை நகர் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது சம்மந்தமாகப் பேசியுள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் “சுரங்கப் பாதைகளில் உள்ள நீர் துரிதமாக அகற்றப்படும்.  சென்னை முழுவதும் சுமார் 2904 மோட்டார் பம்புகள் வைத்து மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு அளிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.