ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு போக்கு காட்டிய பாக். போர் விமானம்: நடுவானில் பகீர்!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 18 அக்டோபர் 2019 (10:22 IST)
போர் விமானம் என நினைத்து இந்திய பயணிகள் விமானத்தை நடுவானில் பாக். போர் விமானம் வழிமறித்தது தற்போது தெரியவந்துள்ளது. 
 
கடந்த் செப் 23 ஆம் தேதி டெல்லியில் இருந்து அப்கானிதான் காபூல் நகருக்கு 120 பயணிகளுடன் வழக்கம்போல பயணித்தது ஸ்பைஸ்ஜெட் விமானம். இந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும், பாகிஸ்தானின் இரண்டு எஃப்-16 ரக போர் விமானங்கள் இந்திய விமானத்தை வழிமறித்துள்ளது. 
 
மேலும், தாழ்வாக பரக்கும்படியும் விமான விவரங்களை கூறும்படியும் நடுவானில் பாகிஸ்தான் விமானிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளர். ஸ்பைஸ்ஜெட் விமானி, இது பயணிகள் விமானம் என கூறிய போதும் அதை நம்பாமல் ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்த விமானத்துடன் பாக். போர் விமானங்கள் பயணித்துள்ளது. 
 
இந்த தகவல் தற்போது மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒன்ருவரால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து பாக். அரசு இந்தியா மீது ஒருவகை கோபத்துடனே இருந்து வருகிறது என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :