1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 30 நவம்பர் 2022 (14:21 IST)

’அவன் எனக்குதான்..?’ ஒரு ஆணுக்காக 5 பெண்கள் குழாயடி சண்டை! – வைரல் வீடியோ!

Video
பீகாரில் ஒரு ஆணுக்காக ஐந்து பெண்கள் நடுவீதியில் குடுமிபிடி, குழாயடி சண்டை போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் சோன்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலே மன்மதராக இருந்திருக்கிறார் போல. இவர் ஒரே சமயத்தில் பல்வேறு பெண்களை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஒருவரை காதலிப்பது இன்னொருவருக்கு தெரியாமல் மெயிண்டெயின் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த ஊரில் நடந்த பொருட்காட்சி ஒன்றிற்கு தன் காதலிகளில் ஒருவரை அழைத்து சென்றுள்ளார். இவர்கள் ஜோடி போட்டுக் கொண்டு போவதை இளைஞரின் மற்றொரு காதலி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அந்த இளைஞரை மடக்கி பிடித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

இளைஞரிடம் அந்த பெண் வாக்குவாதம் செய்வதை பார்த்த மூன்றாவது காதலி இந்த பெண்ணிடம் வந்து சண்டை போட தொடங்கியுள்ளார். இப்படியாக இளைஞரின் 5 காதலிகள் ஒரே இடத்தில் கூடியதால் இளைஞர் யாருக்கு என்று அவர்களுக்குள் ட்விஸ்ட் ஆகி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். தலைமுடியை பிடித்து இழுத்து அவர்கள் சண்டை போடுவதை சுற்றி இருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edited By Prasanth.K