வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (18:44 IST)

அதிக காற்று மாசுபட்ட நகரங்களில் பீகார் முதலிடம்!

நாட்டில் அதிக காற்று மாசு உள்ள  மாநிலங்களின் பட்டியலில் பீகார் முதலிடம் பிடித்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைக்க வேண்டி, அம்மா நில சுகாதாரத்துறை அமைச்சர், அரசு ஊழியர்கள் 50% பேரை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கை சாலையில் குறையும், இதனால் காற்றுமாசு குறைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

இதன்படி,  ஓரளவு காற்றுமாசுபாடு அளவு குறைந்துள்ளது, காற்றின் தரக்குறியீட்டில் 354 ஆக டெல்லி நகரம் பதிவாகியுள்ளது. கடந்த 7 ஆம் தேதி   மொத்தம் 163 நகரங்களில்  பீகார் மா நிலத்தில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 360 ஆக அளவிடப்பட்டது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்திலுள்ள கதிஹார் என்ற நகரம் மாசுப்பட்டுள்ள நகரங்களின் படியலில்  காற்றின் தரக்குறியீடு 360  அளவிடப்பட்டு முதலிடத்திலுள்ளது.

இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் நொய்டா 304 அளவீட்டுடன் 324 மூன்றாவது இடத்திலும், காசியாபாத் நகரம் 304 அளவீட்டில் 4 ஆம் இடத்திலும் உள்ளது.

Edited by Sinoj