வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (19:01 IST)

காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் கைது!

டெல்லி யூனியனில், லிவ் இன் முறையில் வாழ்ந்த வந்த காதலி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவரை 35 துண்டுகளாக வெட்டிய காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன். பூனாவாலா. இவர், மும்பையில் பிரபல கால் சென்டரில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது, அதே நிறுவனத்தின் பணிபுரியும், ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாகவே, இது பெண் வீட்டினருக்கு தகவல் தெரிந்து, இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அஃப்தப் மற்றும் ஷ்ரத்தா இருவரும் டெல்லிக்குக் குடியேறி அங்கு லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

ஆனால், ஷ்ரத்தா தன் வீட்டினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்கள் போனில் அழைத்தாலும் பேசாமல் இருக்கவே அவர் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதை வைத்து, டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர்.

ஆனால், வீடு பூட்டியிருந்தது. எனவே, ஷ்ரத்தாவின் பெற்றில் டெல்லி போலிஸீல் புகாரளித்தனர்.

இதுகுறித்து, காவல்துறை அஃப்தப்பிடம் விசாரிக்கையில், ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தவே,  இருவருக்கும் இடைய பிரச்சனை ஆகியுள்ளது, எனவே, கடந்த மே 18 ஆம் தேதி அஃப்தப் ஷ்ரத்தாவை கொலை சசெய்து, அவது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து, டெல்லியில் ஒவ்வொரு பகுதியில் வீசியதாக அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள  காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj