காதலனைக் கொல்ல கூலிப்படையை அனுப்பிய காதலி!
முன்னாள் காதலனைக் கொல்ல காதலி கூலிப்படையை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகேயுள்ள மாத்தார் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் டிப்ளமோ படித்து முடித்து, அங்கு வெல்டராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும். அணக்கரை பகுதியைச் சேர்ந்த ஹெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜெஸ்லின் வீட்டில் அவருக்குப் பெண் பார்த்து வருவதாகக் கூறி பிரவீனிடம் இருந்து பேசாமல் விலகியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, பிரவீன், ஜெஸ்லின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜெஸ்லினுடன், ஜெனித் என்ற நபர் தொடர்பில் இருப்பதை அறிந்த பிரவீன் அவரை கண்டித்துள்ளார்.
அதன்பின்னர், கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்ப தருவதாகக் கூறி பிரவீனை ஒரு இடத்திற்கு வரவழைத்த ஜெஸ்லின், கூலிப்படையை ஏவி அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj