1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (14:56 IST)

முஸ்லீம்கள் லெட்சுமிய கும்பிடுறதில்ல.. ஆனா பணக்காரங்களா இருக்காங்க! – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

MLA
பீகாரில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பிர்பைண்டி பகுதியை சேர்ந்தவர் பாஜக கட்சி எம்.எல்.ஏ லாலன் பஸ்வான். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர் “ஆத்மா, பரமாத்மா என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே. நம்பினால் கடவுள் இல்லாவிட்டால் கற்சிலை.


முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அதனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லாமல் போய்விட்டார்களா? தர்க்கரீதியாக நம்புவதை நீங்கள் நிறுத்தினால் அறிவுத்திறன் அதிகரிக்கும். அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் மக்கள் நம்பிக்கையை அவமதித்ததாக அவருக்கு எதிராக மக்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Edited By Prasanth.K