1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2025 (14:41 IST)

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் விஜய் முக்கிய ஆலோசனை.. தவெகவில் பரபரப்பு..!

vijay-bussy anand
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கும் நிலையில், அவரை வெளியே அனுப்பிவிட்டு விஜய், கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்ததாக வெளியாகி உள்ள செய்தி, தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய கூட்டம் இன்று நடந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜய், பொது செயலாளர், புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வெளியே இருக்கச்  செல்லுமாறு அவரை அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளிடம் தனித்தனியாக விஜய் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தில் பதவி பெறுவதற்கு பணம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த புகார் குறித்து தான் அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் உள்ளிட்டோர் மீதும் புகார் இருக்கிறதா என்பதை அறிவதற்காக தான் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva