ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு..! ஓட்டு மெஷினில் கோளாறு? – அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்!
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் நாளையும், கேரளாவில் 26ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காசர்கோடு தொகுதியில் வாக்குப்பதிவு பெட்டியில் நோட்டா உள்பட 10 கட்சி சின்னங்களுடன் வாக்குப்பதிவு எந்திரம் உள்ளது. இந்த எந்திரங்களை பரிசோதித்தபோது 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் இடத்தில் உள்ள பாஜகன் சின்னத்திற்கு அருகே உள்ள பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் பதிவாகிறது என புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் எதிர்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இதுகுறித்து சிபிஎம் கட்சி தலைவர் எம்.வி.பாலகிருஷ்ணன் மாவட்ட தேர்தல் அதிகாரி இன்பசேகரனிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகமானவை அல்ல என சில கட்சிகள் தொடர்ந்து பேசி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K