1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (15:52 IST)

ரூ.4 கோடி விவகாரம்.. கருப்பு ஆட்டை கண்டுபிடித்துவிட்டாரா நயினார் நாகேந்திரன்?

நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று கூறப்படும் ரூபாய் 4 கோடி தாம்பரம் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தை போட்டு கொடுத்த கருப்பு ஆட்டை நயினார் நாகேந்திரன் கண்டுபிடித்து விட்டதாகவும் தேர்தலுக்குப் பின் ஒரு பெரிய பஞ்சாயத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் மூன்று பேர் இடம் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 
 
இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த நான்கு கோடி விவகாரத்தை காவல்துறையினரிடம் போட்டு கொடுத்தது யார் என்ற கருப்பு ஆட்டை நயினார் நாகேந்திரன் கண்டுபிடித்து விட்டதாகவும் அவர் மீது தேர்தல் முடிந்ததும் பாஜக தலைமையிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் ஒரு பெரிய பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva