செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (13:48 IST)

மோடி அரசுதான் என் மரணத்திற்கு காரணம்: விவசாயி தற்கொலை

மகாராஷ்டரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன் மரணத்திற்கு மோடி அரசுதான் காரணம் என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மகாராஷ்டரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி சங்கர் பாவோ ராவ் (55). இவர் கடன் வாங்கி பயிரிட்டு வந்துள்ளார். அப்போது பூச்சிக்கடியால் பயிர்கள் சேதமடைந்து அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
 
இதனால் அவர் பயிருக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்துள்ளார். மேலும், இவரது 4 பிள்ளைகளுக்கும் பள்ளி செலவுக்கு பணம் இல்லை. அதனால் மனமுடைந்து போன அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது கயிறு அறுந்ததால் உயிர்தப்பினார். பின்னர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
இதற்கிடைய அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு 6 பக்க கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் மோடி அரசுதான் தன் மரணத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.