வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (12:38 IST)

கேலிகூத்தான உண்ணாவிரதம்: இதை சொல்வது யார் தெரியுமா?

பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருந்தாலும் வழக்கம் போல தனது வேலைகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதால், கடந்த 23 நாட்களாக பாராளுமன்றம் முடக்கிய நிலையில் உள்ளது. 
 
இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12 ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத போராட்டம் ஒரு கேலிக்கூத்தாகும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 
இது குறித்து ரந்தீப் சிங் சுர்ஜித்வாலா கூறியதாவது, நாடாளுமன்றம் 250 மணி நேரம் செயல்படாமல் முடக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
ஆனால், சமீபத்தில் காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில், போராட்டகாரர்கள் உணவு உண்டு பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
தங்களது நிலையே இப்படி இருக்கையில், மற்றவர்களை கேலிகூத்தாக நினைப்பது சரிதானா என கேள்வியும் எழுகிறது.