1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (07:26 IST)

ரஜினிகாந்த், கமல்ஹாசனிற்கு எதிராக கர்நாடக விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய ரஜினிகாந்த், கமல்ஹாசனிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும் என்றார். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.
 
இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதாகக் கூறி அவர்களை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
அப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசனை கண்டித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட கூடாது என்றும் கூறினர்.