1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jio hotstar started his relay out of india today

வெளிநாடுகளிலும் JioHotstar OTT சேவை!.. சிங்கப்பூர், கனடாவில் இன்று துவக்கம்!...

jio hotstar
ஏற்கனவே அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் வெளிநாடுகளில் பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் அவ்வளவு பரிச்சயமாக இல்லை. ஆனால் கொரோனா காலத்தில் சூர்யா தனது சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் இரண்டு படங்களையும் அமேசான் பிரைமில் வெளியிட்டார்..

ஏனெனில், அப்போது தியேட்டர்கள் மூடி கிடந்தன. எனவே பலரும் தங்களின் திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட்டார்கள். தற்போது ஒரு படம் வெளியாகி 3 வாரங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. மேலும், சினிமா வியாபாரத்தில் ஓடிடி விலை முக்கியமாக அங்கமாக மாறியிருக்கிறது.  புதிய படங்களின் ரிலீஸ் தேதியை கூட ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒன்றாக ஓடிடி நிறுவனங்கள் மாறியிருக்கிறது..

அதேபோல் ஓடிடி டீல் முடியாததால் பல படங்கள் ரிலீஸ் தேதியை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள். தமிழைப் பொறுத்தவரை அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ தமிழ் போன்ற நிறுவனங்கள்தான் அதிக தமிழ் படங்களை வாங்குகின்றன.

இந்நிலையில்தான், Jio Hotstar நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே தனது ஓடிடி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் கனடா நாடுகளில் இன்று Jio Hotstar தனது சேவையை தொடங்கியிருக்கிறது. மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12 ஆசிய மொழிகளில் வீடியோக்களை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
50வது படம் பக்கா ஆக்சன்!.. ஷங்கருடன் இணைவாரா சூர்யா?...