வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (21:25 IST)

சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி!.. வாலிபருக்கு 23 மாதங்கள் சிறை!...

சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி!.. வாலிபருக்கு 23 மாதங்கள் சிறை!...
கடந்த 2021ம் வருடம் சிங்கப்பூரில் வசிக்கும் தேவேந்திரன் இளங்கோவன்(31) என்பவர் PS4 எனும் வீடியோ கேமை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சிங்கப்பூரில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒருவர் அந்த வீடியோ கேமை வாங்குவதற்கு தேவேந்திரனை தொடர்பு கொண்டார். அதற்கு 150 சிங்கப்பூர் டாலரை டெபாசிட் செய்ய வேண்டும் என தேவேந்திரன் சொல்ல அந்த பெண் அந்த தொகையை செலுத்தியிருக்கிறார். ஆனாலும் PS4 கேமை தேவேந்திரன் அந்த பெண்ணுக்கு கொடுக்கவில்லை மேலும்.

இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசி வந்திருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணிடம் தனது உடல் சிகிச்சை, நாய்க்கான சிகிச்சை, நீதிமன்ற வழக்கு என பல காரணங்களை சொல்லி பணம் கேட்டு வாங்கியிருக்கிறார். அதை வாங்கி சூதாட்டம், மது என ஜாலியாக செலவு செய்திருக்கிறார். சிங்கப்பூர் மதிப்பில் 2 லட்சத்து 68 ஆயிரம் டாலரை அந்த பெண் கொடுத்திருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் 1.90 கோடி..

தன்னிடமிருந்து எல்லா பணத்தையும் கொடுத்து விட்டதாக அந்த பெண் அவரிடம் சொல்லியும் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தேவேந்திரன் நச்சரித்திருக்கிறார். மகளின் வங்கி கணக்கில் பணம் இல்லாததைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை மகளிடம் இதுபற்றி  விசாரித்திருக்கிறார்.

அதன்படி நடந்ததை தெரிந்து கொண்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் கைது செய்தனர். தேவேந்திரனுக்கு 23 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.