Daily Horoscope
✕

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Updated: வியாழன், 16 ஜூலை 2026 (10:51 IST)
இன்றைய சந்தை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கும் மற்றும் சவரனுக்கும் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று ஆபரணத் தங்கம் வாங்குவோருக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 வரை குறைந்து விற்பனையாகிறது. 1 கிராம் தங்கம் விலை ரூ. 13,150க்கு விற்பனை ஆகிறது.
 
சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் உலகளாவிய சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த வார இறுதி முதல் தங்கம் விலை சற்றே ஏறுமுகமாக இருந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு, திருமண சீசனை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு ஒரு சாதகமான செய்தியாக அமைந்துள்ளது.
 
இருப்பினும், தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயைத் தாண்டியே நீடித்து வருவதால், சந்தை நிபுணர்கள் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குபவர்கள் விலையைத் தொடர்ந்து கவனித்து வருமாறு கூறுகிறார்கள்.
About Author
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More

எல்லாம் காட்டு

அன்பில் மகேஷ் ஃபாரினுக்கு ஓடமாட்டார்.. ஜாமின் கொடுங்க - நீதிமன்றத்தில் வாதம்...

திடீரென 1600 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. 3 முக்கிய காரணங்கள்!

கட்சி நிதியை விட டாஸ்மாக்தான் பெரிய ஊழல்! - அமைச்சர் விக்னேஷ் பகீர் பேட்டி

12 வயது சிறுமி தலையை துண்டித்து படுகொலை; மாயமான தலையை தேடும் காவல்துறை!

5 நாடுகளில் கூகுள் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! நல்லவேளை இந்தியாவில் இல்லை...

அடுத்த கட்டுரையில்