1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (16:46 IST)

தந்தையின் 100வது நினைவு நாள்..! சமாதிக்கு கூட செல்லவில்லை..! விஜய பிரபாகரன் உருக்கம்..!!

Vijayprabakaran
தந்தையின் நூறாவது நினைவு நாளான இன்று சமாதிக்கு கூட செல்லாமல் தங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன் என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் உருக்கமாக பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டுள்ளார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில் சாத்தூர் அருகே வாழவந்தாள்புரம், இராமலிங்காபுரம், ரூக்குமிஞ்சி, அம்மாபட்டி, கத்தாளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய விஜயபிரபாகரன் எனது தந்தை விஜயகாந்தின் நூறாவது நினைவு நாள் சமாதிக்கு அஞ்சலி கூட சொல்லாமல் தங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் என உருக்கமாக கூறினார்.
 
அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் துளசி கூட வாசம் மாறுமே தவிர இந்த தவசி பிள்ளை வார்த்தை மாற மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் தன்னை வெற்றி பெற செய்தால், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவேன் என்று விஜய பிரபாகரன் வாக்குறுதி அளித்தார். 


கொட்டும் முரசு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.