1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (16:16 IST)

பிரதமர் வேட்பாளர் யார்..? ராகுல் காந்தி சொன்ன பதில்..!!

ragul gandhi
பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது என்றார். இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
கடந்த 2004-ல் செய்தது போல், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கருத்து தற்போது பரப்பப்படுகிறது என்றும் அந்த பிரச்சாரத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் அவர் கூறினார்.

 
கொள்கை அடிப்படையிலான தேர்தல் இது என்ற ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.