ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: பெரம்பலூர் , வியாழன், 4 ஏப்ரல் 2024 (14:18 IST)

அமைச்சர் உதயநிதி பிரச்சார கூட்டத்தில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய பெண்கள்!

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி  மண்ணச்சநல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்வதாக அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  
 
இதனால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக துறையூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பைபாஸ் வழியாக திருப்பிவிடப்பட்டன. அதேபோன்று துறையூரில் இருந்து திருச்சி வரும் அனைத்து வாகனங்களும் மண்ணச்சநல்லூர் செல்லாமல்  பைபாஸ் வழியாக திருச்சிக்கு திருப்பிடப்பட்டன. 
 
எதுமலை சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகம் அருகே உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு பேருந்து இல்லாமல் நடந்தே தங்கள் ஊருக்கு சென்றனர்.
 
அதேபோன்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியை முடித்துவிட்டு செல்பவர்களும் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றனர்.
 
அமைச்சர் உதயநிதி வருவதற்கு முன்பே  போலீசார் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ததால் பலர் பாதிக்கப்பட்டனர்.
 
இதனை தேர்தல் அலுவலர்களும் கண்டு கொள்ளவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அமைச்சர் உதயநிதி வருவதற்கு முன்பதாக பலர் மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடினர் அதேபோன்று ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு பெண்கள் ஆடியதை திமுகவினர் மது போதையில் உற்சாகமாக ரசித்தனர்.