1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:56 IST)

சூடு பிடிக்கும் தேர்தல் களம்..! ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் - ராகுல் பிரச்சாரம்...!

Stalin Ragul
கோவையில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.  அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது
 
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 12 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வருகிறார். அதன்படி ஏப்ரல் 12 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புருஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


மேலும், அன்றைய தினம் மாலை கோயம்புத்தூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்.