புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (12:27 IST)

”தெலுங்கு தேசம் செத்து போச்சு” கிண்டலடிக்கும் திரைப்பட இயக்குனர்

ஆந்திரபிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸுக்கும் மிகப்பெரும் மாற்றமாக அமையபோகும் இந்த தேர்தலை ஆந்திராவே எதிர்பார்த்து காத்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் தற்போது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 146 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தெலுங்குதேசம் கட்சி 26 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா தெலுங்கு தேசம் கட்சியை கிண்டல் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்  “தெலுங்கு தேசம் கட்சி, பிறப்பு: 29 மார்ச் 1982, இறப்பு: 23 மே 2019, இறப்பிற்கான காரணம்: பொய் பேசுதல், முதுகில் குத்துதல், ஊழல், ஒய் எஸ் ஜெகன் மற்றும் நர லோகேஷ் ” என்று பதிவிட்டுள்ளார். இது ஆந்திரவாசிகளிடையே இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.