1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (11:14 IST)

ஒன்னு கூட தேரல... தேமுதிக டோட்டல் வாஷ் அவுட்!!

மக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. 
 
தேர்தல் கூட்டணி அமைக்க அவ்வளவு பிரச்சனையை மேற்கொண்டு ஒருவழியாக முட்டி மோதி அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை பெற்றது. ஆனால், 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. 
 
கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ், வட சென்னை தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், விருதுநகர் தொகுதியில் அழகர்சாமி, திருச்சி தொகுதியில் இளங்கோவன் என போட்டியிட்ட நால்வரில் ஒருவர் கூட முன்னிலை பெறவில்லை. 
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்.கே.சுதீஷ் கூட முன்னிலை பெறாதது தேமுதிகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.