வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (10:55 IST)

தருமபுரியில் அன்புமணி பின்னடைவு – அதிர்ச்சியில் பாமக !

பாமகவின் கோட்டையான தருமபுரியில் பாமகவின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மகக்ளவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வரும் வேளையில் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரியில் தொடக்கத்தில் முன்னிலை வகித்த் பாமகவின் அன்புமணி ராமதாஸ் இப்போது திமுக வேட்பாளர் எஸ் செந்தில்குமாரை விட 13000 வாக்குகள் கம்மியாக வாங்கி பின்னடைந்துள்ளார்.

காலை முதல் இந்த தொகுதியில் நிலைமை மாறி மாறி வந்துகொண்டிருப்பதால் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது கடைசி வரை இரண்டு தரப்புக்கும் இழுபறியாக இருக்கும் என தெரிகிறது.